அதிமுக மற்றும் தேமுதிக கட்சியிலிருந்து விலகிய 50 பேர் திமுகவில் ஐக்கியம்..!

அதிமுக மற்றும் தேமுதிக கட்சியிலிருந்து விலகிய  50 பேர் திமுகவில் ஐக்கியம்..!
X
அதிமுக மற்றும் தேமுதிக கட்சியிலிருந்து 50 பேர் விலகி எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், மூலக்காடு ஊராட்சி அதிமுக இளம்பெண் பாசறை செயலாளர் ஆர். சுகந்தி மற்றும் தேமுதிக கிளை செயலாளர் வி. சின்னதுரை ஆகியோர் தலைமையில் அதிமுக மற்றும் தேமுதிக கட்சியிலிருந்து 50 பேர் விலகி எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்எம். துரைசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்

நிகழ்ச்சியானது வெண்ணந்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர்எம். துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி