நாமக்கல் மாவட்டத்தில், 34 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 15 வட்டாரங்களில் 34 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துப்படுகிறது.
இன்று கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும் மையங்கள் விபரம்:
சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, நாகராஜபுரம், பவித்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
மோகனூர் வட்டாரம்: மோகனூர், எம்.ராசாம்பாளயைம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
நாமக்கல் வட்டாரம்: நாமக்கல், முதலைப்பட்டி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (2வது தவணை மட்டும்).
பரமத்தி வட்டாரம்: மேல்சாத்தம்பூர் தொடக்கப்பள்ளி, ப.வேலூர் கந்தசாமி கண்ட பள்ளி.
கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையம், வீரகுட்டை தொடக்கப்பள்ளி.
திருச்செங்கோடு வட்டாரம்: குட்டிமேய்க்கன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளிகள், கொல்லப்பட்டி சுகாதார யைம்.
பள்ளிபாளையம் வட்டாரம்: பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, குமாரபாளையம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம்.
வெண்ணந்தூர் வட்டாரம்: செம்மாண்டம்பட்டி தொடக்கப்பள்ளி, மாட்டுவேலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம்,
இராசிபுரம் வட்டாரம்: கவுண்டம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகம், முருங்கப்பட்டி இ-சேவை மையம், அரசு மானிய ஏவிஎம் ஆரம்பப்பள்ளி.
புதுச்சத்திரம் வட்டாரம்: வினைதீர்த்தபுரம், புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
எலச்சிப்பாளையம் வட்டாரம்: குல்லம்பாளையம் சுகாதார மையம், குமரவேலிபாளையம், கொசவம்பாளையம் தொடக்கப்பள்ளிகள்.
மல்லமசமுத்திரம் வட்டாரம்: ஐ.புதுப்பாளையம், மொரங்கம் சுகாதார மையம், வண்டிநத்தம் அங்கான்வாடி மையம்.
மேற்கண்ட மையங்களில் இன்று காலை 9 மணி முதல் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையிலும், பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணையும், 6,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu