திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி

திருச்செங்கோட்டில்  இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி
X

திருச்செங்கோட்டில் கிருமிநாசினி தெளிக்கும் இளைஞர்கள்.

திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவை பணியில் ஒவ்வொரு வாரமும் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

திருச்செங்கோடு ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 2-வது முறையாக கிருமி நாசினி தெளிப்பு பணி செய்யப்பட்டது.

திருச்செங்கோடு ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லா கவுண்டம்பாளையம் பகத்சிங் நகரில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க, நல்லாகவுண்டம்பாளையம் கிளையின் சார்பில் நல்லகவுண்டம்பாளையத்தின் அனைத்து தெருக்கள் மற்றும் சிறு வீதிகளிலும் கடந்த வாரம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து 2வது முறையாக இன்று காலை 8 மணிக்கு கிளை தலைவர் ஜெகநாதன் தலைமையில் சமூக சேவைப்பணி தொடங்கியது. நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் மற்றும் காளியம்மன், மாரியம்மன் கோவில் பகுதியிலும், பிரதான சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கபட்டது.

வாலிபர் சங்க திருச்செங்கோடு தலைவர் கோபி, சங்கத்தின் உறுப்பினர் உதயகுமார், கார்த்தி, பிரகாஷ், ஜீவா, சஞ்சய், விக்னேஷ், விஷ்ணு ஆகியோர் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாரம் ஒரு முறை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும், இதன்மூலம் இக்கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!