ஹோட்டல் மேலாளரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஹோட்டல் மேலாளரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
X
ஹோட்டல் மேலாளரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு, திருச்செங்கோடு கோர்ட்டில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹோட்டல் மேலாளரை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு, திருச்செங்கோடு கோர்ட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குமாரபாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (40). இவர் அங்குள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அதே ஹோட்டலில் காளிதாஸ் (35) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 11.4.2016 அன்று ஹோட்டலில் இருந்தபோது, அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காளிதாஸ் தான் வைத்திருந்த கத்தியால், மேனேஜர் கதிரேசன் வயிற்றில் குத்தினார். இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்.

இது குறித்து புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்செங்கோடு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், மேனேஜரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக, காளிதாசுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சுஜாதா தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!