திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
X
திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதிமொப்பட்டி சென்ற ரிக் தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதிமொப்பட்டி சென்ற ரிக் தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்செங்கோடு குமரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவரர் நல்லமுத்து(50) ரிக் வண்டி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சித்தாளந்தூருக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வந்த ஒருவர், மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

இந்த விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நல்லமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து டூ வீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!