திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
X

பைல் படம்.

திருச்செங்கோடு அருகே தறித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி மேட்டுப்பாறை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (64), தறித்தொழிலாளி. அவரது மனைவி செல்வி, இவர்களுக்கு திருமணம் முடிந்த 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தறிப்பட்டறையில் வேலை இல்லாதால் பெரியசாமி வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெரியசாமி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா