திருமணிமுத்தாறில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

திருமணிமுத்தாறில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்: போலீஸ் விசாரணை
X
Dead News - திருமணிமுத்தாறில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dead News - நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம், திருமணிமுத்தாறில் அடையாளம் தெரியாத, சுமார் 50 வயதுள்ள ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் எலச்சிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.சடலமாக கிடந்த நபர் யார் ?, எந்த ஊரை சேர்ந்தவர் ?, அவர் எப்படி இறந்தார்?, என்பவை குறித்த விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இதனையடுத்து போலீசார், இறந்தவர் சடலத்தை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story