திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

பைல் படம்.

திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனை நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (டிசிஎம்எஸ்) தலைமை இடமான திருச்செங்கோட்டில் பருத்தி ஏலம் நடைபெற்றது. திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்கனாபுரம், ஈரோடு, அவினாசி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.5,589 முதல் ரூ.8,500 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,069 முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 145 மூட்டைகள் பருத்தி ரூ.2 லட்சம் மதிப்பில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி