மேற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையமாக திருச்செங்கோடு தேர்வு: ஐஜி ஆய்வு

மேற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையமாக திருச்செங்கோடு தேர்வு: ஐஜி   ஆய்வு

பைல் படம்

மண்டலங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட காவல்நிலையங்களில் மாநில அளவில் சிறந்த காவல்நிலையத்தை தேர்வுசெய்யும் பணி நடைபெறுகிறது

மேற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையமாக திருச்செங்கோடு நகர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையொட்டி ஐஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக திருச்செங்கோடு நகர காவல் நிலையம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மண்டலங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களில், மாநில அளவில் சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மேற்கு மண்டலத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக செயல்பட்டு வரும், திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி தினகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்தின் முன் பகுதியில் உள்ள நூலகம், வரவேற்பு அறை, தலைமை எழுத்தர் அறை, கணினி அறை, போலீசார் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் ஐஜி தினகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்பி செல்லப்பாண்டியன், திருச்செங்கோடு டிஎஸ்பி சீனிவாசன், பயிற்சி டிஎஸ்பி பவித்ரா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக காவல் நிலையத்துக்கு வந்த ஐஜி தினகரனை, கூடுதல் எஸ்பி செல்லப்பாண்டியன் பூங்கொத்து அளித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஐஜி தினகரன் ஏற்றுக் கொண்டார்.


Tags

Next Story