திருச்செங்கோடு: காந்தி ஆசிரமத்தில் ராஜாஜி பிறந்த நாள் விழா
திருச்செங்கோடு அருகே காந்தி ஆசிரமம் .
திருச்செங்கோடு காந்திர ஆசிரமத்தில், ராஜாஜி பிறந்த நாள் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, புதுப்பாளையத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் மூதறிஞர் ராஜாஜியின் 143-ஆவது பிறந்த தின விழா, மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தமாகா தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். தமாகா பொதுச் செயலாளரும், காங்கேயம் எம்எல்ஏவுமான விடியல் சேகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராஜாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காந்தியடிகள் தங்கிய இடம், அவர் சுற்றிய ராட்டை, ராஜாஜி வாழ்ந்த இடம், காந்தி ஆசிரம உற்பத்தி பிரிவு, விற்பனைப் பிரிவு, கதர் பிரிவு போன்றவற்றை பார்வையிட்டனர். காந்தி ஆசிரம நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடுவதற்கு தமாகா முயற்சி எடுக்கும் என்று தெரிவித்தனர்.
காந்தி ஆசிரம செயலாளர் ரவிக்குமார், மல்லசமுத்திரம் வட்டார தமாகா தலைவர் சதீஷ்குமார், எலச்சிபாளையம் வட்டாரத் தலைவர் சசிகுமார், ஆசிரியர் பிரிவு மாவட்டத் தலைவர் சாம் பிரசன்னா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu