நிதி நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபடக்கூடாது: திருச்செங்கோடு போலீஸ்

நிதி நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில்  ஈடுபடக்கூடாது: திருச்செங்கோடு போலீஸ்
X
திருச்செங்கோடு பகுதியில், கடன் பெற்றுள்ளவர்களிடம், ஊரடங்கு காலத்தில் பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்தில், பைனான்ஸ் கம்பெனி நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்களுக்கான ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. 14 பைனான்ஸ் நிறுவன பங்குதாரர்கள் மற்றும் பைனான்ஸ் சங்க நிர்வாகிகள், இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு போலீஸ் டிஎஸ்பி செல்வம் தலைமை வகித்துப் பேசியதாவது: தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், தொழில் மற்றும் வணிகள் நிறுவனவங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இன்றி வாடி வருகின்றனர்.

இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தவணைகளை கறாராக வசூலிக்க வேண்டாம். வட்டிக்கு வட்டி என்று அபராத வட்டி வசூலிக்கக் கூடாது. கடன் பெற்றுள்ளவர்களின் நிதி நிலைமையை அறிந்து, மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வசூல் செய்ய வேண்டும். தவணைத் தொகையை திருப்பிச் செலுத்த முடியாதவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது. அப்படி செய்வதாக புகார் வந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், திருச்செங்கோடு பைனான்ஸ் அசோசியேசன் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்ட திரளான பைனான்ஸ் நிறுவன நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!