திருச்செங்கோடு: பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து, நூதன ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு: பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து, நூதன ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து டயர் உருட்டி போராட்டம் செய்யும் வாலிபர் சங்கத்தினரை படத்தில் காணலாம்.

திருச்செங்கோட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அண்ணா சிலை அருகே டயர் உருட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து டயர் உருட்டும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோபி திருச்செங்கோடு கமிட்டி தலைவர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் மத்திய அரசுக்கு எதிராகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நூதனமாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் வாலிபர் சங்கத்தினர் சாலையில் டயரை உருட்டி நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 15க்கும் மேற்பட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு