திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை: முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை

திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை: முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை
X

மாணவி அர்ச்சனா.

திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி அர்ச்சனா பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பள்ளி தமிழ் ஆசிரியை அருள் செல்வி தான் காரணம் என்று கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்னறனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறப்பட்ட ஆசிரியை அருள் செல்வி, தலைமை ஆசிரியை ரங்கநாயகி மற்றும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எதுவம் எழுதி வைத்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.

Tags

Next Story