தி.கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏஈஸ்வரன் ஆகியோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர்.
Today Temple News in Tamil - திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் திருக்கோயில் வைகாசி விசாகத் தேர்த்திரு விழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 14 நாட்கள் நடக்கும் இவ்விழாவின் 9 ம் நாளான நேற்று முன் தினம் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் ஆகிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை யடுத்து 10வது நாள் நிகழ்ச்சியான அர்த்தநாரீஸ்வர் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, திருச்செங்கோடு எம்.எல்.ஏ ஈஸ்வரன், அறநிலையத்துறை கமிஷனர் குமர குருபரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அர்த்தநாரீஸ்வரர் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தற்போது, தேர் தெற்கு ரதவீதி பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தேரோட்டம் நடைபெற்று, நாளை புதன் கிழமை அன்று நிலை சேர்க்கப் படும். தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான ÷ பாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu