திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர் ரயில் முன் பாயந்து தற்கொலை

திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர் ரயில் முன் பாயந்து தற்கொலை
X
திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவர் ரயில் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மோடமங்கலம் அருகே, அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவர் தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவர் யார், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஆத்தூர் அருகே ஆசிரியர் வீட்டில் டூவீலர் திருட்டு! போலீசார் விசாரணை