திருச்செங்கோடு மூத்த காங்கிரஸ் தலைவர் மனைவி பார்வதி அம்மாள் காலமானார்

திருச்செங்கோடு மூத்த காங்கிரஸ் தலைவர் மனைவி பார்வதி அம்மாள் காலமானார்
X

பார்வதி அம்மாள்.

மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டரின் மனைவி பார்வதி அம்மாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

திருச்செங்கோடு, சிஎச்பி காலனியில் வசித்து வந்தவர், டி.எம்.காளியண்ணனகவுண்டர், மூத்த காங்கிரஸ் தலைவரான இவர், இந்திய அரசியல் நிர்ணய சபை ஒருப்பினராகவும், ஒருங்கிணைந்த சேலம் ஜில்லா போர்டு தலைவராகவும், இந்தியன் வங்கி இயக்குனராகவும், முன்னாள் எம்.பி மற்றும் எம்எல்சியாகவும் பணிபுரிந்துள்ளார்.

தனது 101வயது வயதில், கடந்த ஆண்டு கெரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் காலமானார். இவரது மனைவி பார்வதி அம்மாள் (95) கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று 17ம் தேதி மதியம்12 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வக்கீல் டி.கே.ராஜேஸ்வரன் என்ற மகனும், வசந்தகுமாரி, சாந்தகுமாரி, விஜயகுமாரி ஆகிய மகள்களும் உள்ளனர்.

திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் நேற்று மாலை 6 மணியளவில் அவரது உடல் தகனம் நடைபெற்றது. திரளான அசியில் கட்சியினர், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!