இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் இடைவிடாமல் கல்வி கற்கலாம்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற இல்லம்தேடிக்கல்வி திட்ட பயிற்சி முகாமில் மாநில கண்காணிப்பு அலுவலர் இளம்பகவத் பேசினார்.
அனைத்து கிராமப்புற மாணவர்களும் இடைவிடாமல் கல்வி கற்கும் இல்லம் தேடிகல்வித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளத என்றார் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி இளம்பகவத்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பேரிடர் கொரோனாவினால் கல்வியிழந்த, 1 முதல், 8ம் வகுப்பு குழந்தைகளுக்கான, கற்றல் இடைவெளியை குறைக்க, மாநில அளவிலான இல்லம் தேடிக்கல்வி கலைக்குழு கலைஞர்களுக்கு, 3 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி திருச்செங்கோட்டில் தொடங்கியது.
நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். மாநில திட்ட இயக்குனர் சுதன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் திட்டம் குறித்து விளக்கினர்.
இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி இளம்பகவத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
அனைவருக்கும் கல்வி என்பதை எடுத்துரைக்கும் வகையில், தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்கி வரும் தமிழக அரசு, புதிய முன்னெடுப்பாக, இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், பேரிடரால் கல்வி தொடர்பை இழந்துள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் அனைத்து மாணவர்களுக்கும், கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், நாட்டுப்புற கலைப்பயண கலைக்குழுவினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் மூலம், ஆங்காங்கே இருக்கக் கூடிய கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களுக்கே தேடிச் சென்று, இடையூறு இல்லாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
இளம் வயதிலேயே கல்வியின் முக்கியத்துவத்தை ஆணித்தரமான மனதில் பதிய வைக்க வேண்டும என்பதற்காக, இசையோடும், நடனத்தோடும் கூடிய விழிப்புணர்வை கிராமிய கலைஞர்கள் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை பரிசோதனையாக 12 மாவட்டங்களில் தொடக்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்திலும் இத்திடம் தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற மாணவர்களுக்கும் இடைவிடாமல் கல்வி கற்கும் வகையில் இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.
இப்பயிற்சியில், 36 மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு கலைக்குழுவினர் அடங்கிய கலைஞர்கள் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை லயோலா கல்லூரியை சேர்ந்த மாணவரும், அரவணைக்கும் மைய ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் காளீஸ்வரன், மாநில திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu