முக கவசம் விலை உயர்வு தரமான முக கவசம் வழங்க கோரிக்கை

முக கவசம் விலை உயர்வு தரமான முக கவசம் வழங்க கோரிக்கை
X
சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் முக கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது தரமானதாக இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக நாளை முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொற்றை தடுக்கும் வகையில் அரசு, அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக முக கவசங்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திருச்செங்கோட்டில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலங்களில் துணியில் தைக்கப்பட்ட முக கவசங்கள் சாலையோரங்களில் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

இரண்டாவது அலையின் வீரியம் அதிகமாக உள்ளதால் மக்கள் மருந்தகம் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என். 95முக கவசம் கடந்த மாதம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது நிலையில் தற்போது 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் மூன்று அடுக்கு முகக் கவசங்கள் முன்பு ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1௦ முதல் 15 ரூபாய் வரை என வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

முகக்கவசம் அனைவரும் தரமாக அணிய, உற்பத்தியை அதிகரித்து விலையை குறைக்க தமிழக அரசும், வியாபாரிகளம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!