மல்லசமுத்திரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: 1,500 பேருக்கு பணி நியமன ஆணை
மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்க பணி நியமன கடிதங்களை நாமக்கல் எம்.பி., சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், மஹேந்திரா பொறியியல் கல்லூரியில், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் எச்.சி.எல், ஐசிஐசிஐ, எல்ஐசி, ராம்ராஜ் காட்டன், ஃபோக்ஸ்வேகன் உட்பட 72 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக 3,000-க்கும் மேற்பட்ட டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்த 3,000-க்கு அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த முகாமில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாமக்கல் எம்.பி சின்ராஜ், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் ஆகியோர் பணி நியமன கடிதங்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் பிரியா, மஹேந்திரா கல்வி நிறுவனங்களின் தலைவர் பரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu