எலச்சிப்பாளையம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 7 பேர் படுகாயம்

எலச்சிப்பாளையம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 7 பேர் படுகாயம்
X

பைல் படம்

எலச்சிப்பாளையம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சை திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த பூபாலன் (34) என்பவர் ஓட்டி சென்றார். எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பாலம் பகுதியில் அந்த பஸ் சென்றபோது போது, மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். தலையில் படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் பூபாலன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ராசிபுரம் சீராப்பள்ளி பகுதியை சேர்ந்த பஸ் கண்டக்டர் செல்வம் (45), மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பஸ்சில் பயணம் செய்த ராசிபுரம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சங்கர் (35), காக்காவேரியைச் சேர்ந்த சீனிவாசன் (43), கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (39), கோத்தகிரி பகுதியை சேர்ந்த கதிர் (35), அவருடைய மனைவி துர்கா தேவி (33) ஆகியோர் படுகாயமடைந்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare