ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

கோப்பு படம் 

ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்செங்கோட்டில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிஎஸ்டி வரி உயர்வை ரத்து செய்யக்கோரி திருச்செங்கோட்டில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு, சூரியம்பாளையம், சட்டையம்புதூர், கவுண்டம்பாளையம், ஆனங்கூர், தேவனாங்குறிச்சி, குமாரமங்கலம், தோக்கவாடி உள்ளிட்ட 13 சிறு விசைத்தறி சங்கங்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள், திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூல் விலை உயர்வைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஜனவரி 1 முதல் காட்டன் துணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி 5 வரியை சதவீதத்திலிருந்து 12 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதை ரத்து செய்யக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!