எலச்சிபாளையம் அரசு பள்ளி முன்பு வேகத்தடை கோரி நூதன ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முன்பும் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அப்பள்ளி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலை, கை, கால்களில் கட்டு கட்டிக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், எலச்சிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. சாலை விரிவாக்க பணிக்கு முன் எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி செல்லும் வழியிலும் வேகத்தடை இருந்தது. சாலை விரிவாக்கப் பணிக்கு பின் வேகத்தடை அகற்றப்பட்டதால் நாள்தோறும் சாலை விபத்துகள் ஏற்பட்டு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலதரப்பினரும் காயமடைகின்றனர்.
எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதுபோல் ஆத்துமேடு மற்றும் மூலக்கடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ். ரமேஷ். கிட்டுசாமி. ரகமத், பெரியசாமி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu