அரசு பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்: கான்ட்ராக்டர்களுக்கு நாமக்கல் எம்.பி அறிவுறுத்தல்

அரசு பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்:  கான்ட்ராக்டர்களுக்கு நாமக்கல் எம்.பி அறிவுறுத்தல்
X

சேந்தமங்கலத்தில் நடைபெற்ற அரசுப்பணி கான்ட்ராக்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், நாமக்கல் எம்.பியும், மாவட்ட திஷா குழு தலைவருமான சின்ராஜ் பேசினார்.

அரசுப்பணிகளை எவ்வித குறைபாடும் இல்லாமல் தரமான முறையில், கான்ட்ராக்டர்கள் செய்ய வேண்டும் என்று நாமக்கல் எம்.பி சின்ராஜ் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம், டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் அரசு பணிகளை டெண்டர் எடுத்து செய்யக்கூடிய கான்ட்ராக்டர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது.

நாமக்கல் எம்.பியும், மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு (திஷா) தலைவருமான சின்ராஜ் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

கடந்த 2020-2021ம் ஆண்டில் நிலுவையில் உள்ள பணிகளை கான்ட்ராக்டர்கள் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் அரசு பணிகளை, எவ்வித குறைபாடும் இல்லாமல், தரமாக செய்யவேண்டும். கான்ட்ராக்டர்கள் பணி செய்யும்போதே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு நிலையிலும் நேரில் சென்று ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திஷா குழுவின் உறுப்பினர் செந்தில் முருகன் மற்றும் ராசாத்தி அருள்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai marketing future