நாமக்கல்: எலச்சிப்பாளையத்தில் ரூ.5.25 லட்சத்தில் சுகாதார வளாக அமைவிடம்- கலெக்டர் ஆய்வு

நாமக்கல்: எலச்சிப்பாளையத்தில் ரூ.5.25 லட்சத்தில் சுகாதார வளாக அமைவிடம்- கலெக்டர் ஆய்வு
X

 சக்திநாய்க்கன்பாளையத்தில் சுகாதார வளாகம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா, எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மண்டகப்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள பாரதியார் நகர் பகுதி, கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாரதியார் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சுகாதார வளாகம் கட்டித்தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு சென்று சுகாதார வளாகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தார். சக்திநாய்க்கன்பாளையம் அருகில் சுகாதார வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai based agriculture in india