திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத வானகம் மோதி விவசாயி சாவு

திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத வானகம் மோதி விவசாயி சாவு
X
பைல் படம்.
திருச்செங்கோடு அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூ வீலரில் சென்ற விவசாயி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், எம். கந்தம்பாளையம் அருகே உள்ள கோலாரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (65), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது டூ வீலரில் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர் உஞ்சனை மாரியம்மன் கோயில் அருகே ரோட்டைக் கடக்க முயன்றார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று, டூ வீலர் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாõயமடைந்த பாலசுப்பிரமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare