தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆய்வு

தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆய்வு
X

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை, தேர்தல் கமிஷன் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா, கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22ம் தேதி, மாவட்டத்தில் உள்ள 3 மையங்களில் எண்ணப்படுகிறது.

நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர், சேந்தமங்கலம், வேலூர், வெங்கரை ஆகிய 9 டவுன் பஞ்சாயத்துக்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இராசிபுரம், எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இராசிபுரம் நகராட்சி மற்றும் அத்தனூர், பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய 7 டவுன் பஞ்சாயத்துக்களில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் திருச்செங்கோடு நகராட்சி, பள்ளிபாளையம் நகராட்சி, குமாரபாளையம் நகராட்சி மற்றும் மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் ஆகிய 3 டவுன் பஞ்சாயத்துக்களில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

இதையொட்டி இராசிபுரம் எஸ்.ஆர்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா, கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்படும் வரவேற்பு அறை, இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வருவதற்கு ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் தனி பாதை, அரசு அலுவலர்களுக்கு தனிப்பாதை அமைக்க சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். வாக்கு எண்ணும் அறையில் முகவர்கள் பார்வையிட பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதையும், அறைக்குள் நுழைய தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மையங்கள் முழுவதும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி, நகராட்சி கமிஷனர்கள், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!