வட்டார அளவிலான தடகளப் போட்டி: வே.க.பட்டி கொங்குநாடு பள்ளி அசத்தல்
வட்டார அளவிலான தடகளப்போட்டியில் பதக்கங்களை குவித்து, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவர்களை, பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
திருச்செங்கோடு தாலுக்கா அளவிலான தடகளப் போட்டி, இறையமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டியில் இப்பள்ளி மாணவர்கள், மாணவர் பிரிவில் 15 தங்கப்பதக்கமும், 19 வெள்ளிப்பதக்கமும், 8 வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மாணவியர் பிரிவில் 1 தங்கப்பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் பெற்றனர். 17 வயது பிரிவில் மாணவர் கிரிசாந்த் தனிநபர் சாம்பியன் பட்டத்தைப் வென்றார்.
மொத்தம் 89 புள்ளிகளுடன் கொங்குநாடு பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. பதக்கம் பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் , கொங்குநாடு கல்வி நிறுவனத்தின் தாளாளர் டாக்டர் ராஜன், தலைவர் ராஜா, செயலாளர் சிங்காரவேலு, நிர்வாகிகள் ராஜராஜன், ராஜேந்திரன், முதல்வர் சாரதா ஆகியோர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu