வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு தாலுக்கா வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுலகத்தை மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, வையப்பமலை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, விவரங்களை சரிபார்த்தார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கம்ப்யூட்டரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு பரிந்துரை செய்த நாள் விவரம் ஆகியவற்றை சரிபார்த்தார். மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்காக சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும்போது, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் வையப்பமலை வருவாய் கிராமத்திற்குட்பட்ட நாகர்பாளையம் விஏஓ அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்