மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா, எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், கூத்தம்பூண்டி, மேட்டுப்புதூர் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், அங்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப்பதிவேடுகளை பார்வையிட்டார். வகுப்பறைக் கட்டிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, அங்கன்வாடி மையத்தில் உள்ள பணியாளர்களிடம், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கையையும், வயதுக்கேற்ப எடை மற்றும் உயரம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, அங்கன்வாடி மையித்தில் உள்ள சமையல் கூடத்தில், தயார் செய்யப்படும் உணவு விவரங்களைக் கேட்டறிந்து, அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார்.

மேலும், பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறதா என்பதைக் கேட்டறிந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!