/* */

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு
X

திருச்செங்கோடு அரச ஆஸ்பத்திரி பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்து, திடீர் ஆய்வு செய்தார். அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு, பொது வார்டுகளுக்கு சென்ற கலெக்டர் அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து ரத்த வங்கிக்கு சென்ற கலெக்டர், அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அலுவர்களிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை வார்டுக்கு சென்ற கலெக்டர், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சத்தான உணவு அளிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகை தந்தவர்களிடம் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பேசினார். இதனை தொடர்ந்து நோயாளிகளிடம் சிகிச்சை முறையிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது, திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சை பிரிவு டாக்டர் சத்தியபானு, தடுப்பூசி பிரிவு டாக்டர் மோகனபானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Jun 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  7. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  8. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  9. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  10. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!