நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்: பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்: பக்தர்கள் தரிசனம்
X

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சயேநர் சுவாமிக்கு இந்த ஆண்டின் கடைசி வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இந்த ஆண்டின் கடைசி வெண்ணெய்க்காப்பு அலங்காரம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இந்த ஆண்டின் கடைசி வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியான கோட்டையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக, வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு தினசரி காலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு 1,008 வடை மாலை சார்த்தப்படும். பின்னர், நல்லெண்ணெய், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். மதியம் 1 மணியளவில் அபிசேகம் நிறைவு பெற்று, சுவாமிக்கு வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி மற்றும் மலர் அலங்காரம் நடைபெறும்.

பக்தர்களின் கட்டளையின் பேரில், மாலையில் வெண்ணெய்க்காப்பு, சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்து இந்த சிறப்பு அலங்காரங்களில் பங்கேற்பார்கள். ஒவ்வாரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் (பனி காலங்களில்) சுவாமிக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெறும். இந்த ஆண்டின் கடைசி வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நேற்று இரவு நடைபெற்றது. 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமிக்கு உடல முழுவதும் வெண்ணெய்க்காப்பு செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் திரை விலக்கப்பட்டு தீபாராதணை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்