திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பஸ் வசதி

திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பஸ் வசதி
X

பைல் படம்.

திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. தினசரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல வசதியாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தேர் நிலை அருகில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இங்கு வந்து பக்தர்கள் பஸ்சில் ஏறுவது சிரமமாக இருந்தது. இதனால், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருக்கோவில் பஸ்களை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படும் என்று கோவில் உதவி கமிஷனர் ரமணிகாந்தன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!