திருச்செங்கோடு அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி: 2 பேர் கைது

திருச்செங்கோடு அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி: 2 பேர் கைது
X
திருச்செங்கோடு அருகே கோயில் உண்டியலில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு அருகே கோயில் உண்டியலில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு தாலுக்கா, எலச்சிபாளையம் அருகே உள்ள, இலுப்புலி மேட்டுக்காடு பகுதியில் எல்லை கருப்பணார் கோயில் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில், அந்தக்கோயில் உண்டியலை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் கோயிலுக்கு சென்று பார்த்தபோது 2 பேர் உண்டியலை உடைக்க முயன்றனர். பொதுமக்களைக் கண்டதும், தப்பியோட முயன்றவர்களை, விரட்டிப்பிடித்து எலச்சிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (31), கார்த்தி (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து உண்டியலில் திருடப்பட்ட பணம் ரூ.1,000 பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்