காளிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் : ஒருவர் உயிரிழப்பு

காளிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் : ஒருவர் உயிரிழப்பு
X
காளிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்செங்கோடு தாலுக்கா, மல்லசமுத்திரம் அருகே உள்ள சின்னகொல்லப்பட்டி பெரும்பாறைக் காட்டை சேர்ந்தவர் ரங்கசாமி ( 65), கூலித்தொழிலாளி. இவருடைய பேரன் ராகேஷ் (25). சம்பவத்தன்று, ரங்கசாமி, ராகேசுடன் காளிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராகேஷ் ஓட்டினார்.

அப்போது மல்லசமுத்திரம் நந்தவனதெருவை சேர்ந்த கோபால் (25), என்பவர் தனது மனைவி பேபியுடன் எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். காளிப்பட்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ரங்கசாமி, ராகேஷ், கோபால், பேபி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture