திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ.70லட்சம் மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை

Turmeric Uses in Tamil
X

Turmeric Uses in Tamil

திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (டிசிஎம்எஸ்) தலைமை அலுவலகத்தில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு, மஞ்சள் கொள்முதல் செய்தனர். இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,109 முதல் ரூ.9,459 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,199 முதல் ரூ.6,910 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,022 முதல் ரூ.12,119 வரை விற்பனை ஆனது. மொத்தம் 1,500 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!