திருச்செங்கோடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

பைல் படம்.
திருச்செங்கோடு தாலுக்கா, மொளசி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (65). இவர் சம்பவத்தன்று, அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு, மிட்டாய் வாங்கிக் கொடுத்து, ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது. அப்போது சிறுமியின் அலறம் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு சென்று சிறுமியை மீட்டு அழைத்துச் சென்றார்.
பின்னர் இதுகுறித்து அந்த பெண், சிறுமியின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடாஜலத்தை அழைத்து வந்து, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடாஜலம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu