திருச்செங்கோடு அருகே விசைத்தறி உரிமையாளர் குடும்பத்தில் 3பேர் தற்கொலை
திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் கோயக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). விசைத்தறி உரிமையாளர். அவரது மனைவி நீலாம்பாள் (50). அவர்களுக்கு பிரீத்தி (21), ஷாலினி (17) என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்களில், பிரீத்திக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆகி விட்டது. இளைய மகள் ஷாலினி பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மாலை, மூத்த மகள் பிரீத்தி தனது தாயாரை, செல்போனில் அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் நீலாம்பாள் செல்போனை எடுக்கவில்லை. உடனே பிரீத்தி அவரது சித்தப்பா மகன் சரண் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். உடனே சரண் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
பக்கத்து வீட்டில் சென்று பார்த்தபோது, ஜன்னல் அருகே நீலாம்பாள் தூக்கில் தொங்குவது தெரியவந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முன் பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது நீலாம்பாளின் அருகே வெங்கடாசலமும் தொங்குவதை கண்டு, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஷாலினியை தேடிய போது மொட்டை மாடி அருகே உள்ள குளியலறையில் அவர் இறந்து கிடந்தார். அங்கு மேலே ஒரு கயிறு அறுக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பி சீனிவாசன், திருச்செங்கோடு ரூரல்போலீஸ் இன்ஸ்öபெக்டர் ஜெகநாதன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மூவரும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu