திருச்செங்கோட்டில் அறிவியல் ஆசிரியா்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி தொடக்கம்!

திருச்செங்கோட்டில் அறிவியல் ஆசிரியா்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி தொடக்கம்!
X
நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியா்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

நாமக்கல் : கே. எஸ். ரங்கசாமி கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை இணைந்து நடத்தும் நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான 5 நாள் பணியிடை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

பயிற்சி முகாம் தொடக்க விழா

பயிற்சி முகாம் தொடக்க விழாவில் கே. எஸ். ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ர. சீனிவாசன், துணைத் தலைவர் கே. எஸ். சச்சின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் வே. பத்மநாபன் தலைமை வகித்தார். முதன்மைத் திட்ட அலுவலர் எஸ். பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் எஸ். பிரசன்ன ராஜேஷ்குமார் வரவேற்றார்.

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் சிறப்பு விருந்தினர்

முகாமில் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் வி. கற்பகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அறிவியல் ஆசிரியர்களுக்கான வழிமுறைகள்

1 . அறிவியல் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது பாடங்களைக் காட்சிப்படுத்தி நடத்துதல் வேண்டும்

2 . வகுப்பில் கரும்பலகையோடு நின்றுவிடாமல் செய்முறைப் பயிற்சி வேண்டும்

3 . அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்

4 . அன்றாட வாழ்விலேயே அறிவியலும் இணைந்திருப்பதை எடுத்துரைக்க வேண்டும்

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்