கோடை வெயிலின் விளைவாக ஏரிகள் மேய்ச்சல் நிலங்களாக மாறுவதற்கு காரணம்

கோடை வெயிலின் விளைவாக ஏரிகள் மேய்ச்சல் நிலங்களாக மாறுவதற்கு காரணம்
X
கோடை வெயில் மற்றும் நீர் குறைபாடு, ஏரிகள் மேய்ச்சல் நிலமாக மாறும் அபாயம்

வெண்ணந்தூர் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதுடன், விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு பெய்த பருவ மழையால் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல் ஏரி, மதியம்பட்டி ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, சவுரிபாளையம் ஏரி, சேமூர் ஏரி ஆகியவை ஓரளவு நிரம்பி, விவசாயிகள் பல்வேறு ரக பயிர்களை சாகுபடி செய்தனர். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் கொளுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து, பல ஏரிகள் முற்றிலும் வறண்டு வருகின்றன. பெரும்பாலான ஏரிகள் தற்போது ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவருகின்றன. இந்நிலையில், சேலம், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்ப்போர் தங்களது பராமரிப்பில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆடுகளை ஓட்டி வந்து 'கிடை' அமைத்து வருகின்றனர்.

Tags

Next Story