அதிகாரிகள் மீன் கடைகளில் திடீர் ஆய்வு

மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்லில் உள்ள ஒரு மீன்கடையில் மீன் சாப்பிட்ட இரு குழந்தைகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு மீன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வியாபாரிகளுக்கு வழங்கினர். நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள மீன் சப்ளை செய்யும் கடைகள் உட்பட மொத்தம் 11 மீன்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது தரம் குறைந்த இரண்டு கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிகாரிகள் தெரிவித்ததன்படி, அனைத்து மீன் கடைகளும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu