வானவில் மன்றம் சார்பில், நாமக்கலில் அறிவியல் மாநாடு

வானவில் மன்றம் சார்பில், நாமக்கலில் அறிவியல் மாநாடு
X
நாமக்கலில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு, 127 ஆசிரியர்களின் சிறந்த ஆய்வு கட்டுரைகள்

வானவில் மன்றம் சார்பில் ஆசிரியர்களுக்கு அறிவியல் மாநாடு

நாமக்கல் வானவில் மன்றம் சார்பில் மேற்கு மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் மாநாடு குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் நடைபெற்றது. நாமக்கல், வேலூர், புதுக்கோட்டை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் (பொ) குமார் தலைமை வகித்தார். மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் விளக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் திருநாவுக்கரசு, மாநில கருத்தாளர் ராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கைலாசம், சேலம் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் செங்குட்டுவேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நாமக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 127 ஆசிரியர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரைகளுக்கு அறிவியல் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Tags

Next Story
ai solutions for small business