எருமப்பட்டி வட்டாரத்தில் வரும் 10ம் தேதி இளைஞர் திறன் திருவிழா

பைல் படம்.
Youth Skill Day -இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் எருமபட்டி வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு அரசு துறைகளின் கீழ், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதமரின் கவுசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, டிரைவர், உதவி நர்ஸ், நான்கு சக்கர வாகனம் மெக்கானிக், கம்ப்யூட்டர் பயிற்சிகள், சில்லறை விற்பனை வணிகம், ஃபாஸ்ட் ஃபுட் தயாரித்தல், செல்போன் சர்வீஸ், போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு / சுய தொழில் செய்வதற்கு வழிவகை செய்து தரப்படும்.
இந்த இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் வகையில் இளைஞர் திறன் திருவிழா வருகிற 10ம் தேதி சனிக்கிழமை காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை எருமபட்டி அருகில் உள்ள ஸ்ரீ ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. முகாமில் எருமபட்டி வட்டாரத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான பயிற்சியினை தேர்வு செய்து, பயிற்சி பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu