சேந்தமங்கலத்தில் பயிற்சி நர்சை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கைது

சேந்தமங்கலத்தில் பயிற்சி நர்சை காதலிக்க வற்புறுத்திய இளைஞர் கைது
X
பைல் படம்.
சேந்தமங்கலத்தில் பயிற்சி நர்சை, காதலிக்க வலியுறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு இளம்பெண் பயிற்சி நர்சாக பணியாற்றி வருகிறார். இவரை சேந்தமங்கலம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் அரசு ஆஸ்பதிரிக்கு வந்த மணிகண்டன் அந்த பயிற்சி நர்சிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பயிற்சி நர்சை சரமாரியாக தாக்கினார். நர்சின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மணிகண்டனைப் பிடித்து சேந்தமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் நர்ஸ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!