சேந்தமங்கம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது

சேந்தமங்கம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது
X

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்த, வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்தவர் கபிலன் (22). இவர் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு முட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கும், பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும் மாணவிக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கும், கபிலனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்து மாணவி, நாமக்கல் குழந்தைகள் நல குழுமத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் இரு குடும்பத்தினரையும் பலமுறை விசாரணைக்கு அழைத்தும் அவர்கள் உடன்படவில்லை.

இதனால் குழந்தைகள் நல குழுமத்தினர் இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். இதையொட்டி, பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி, 18 வயது பூர்த்தி அடையாமல் பிளஸ்-1 படித்த மாணவியை திருமணம் செய்ததற்காக கபிலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!