நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சேந்தமங்கலம் வாரச்சந்தை இடமாற்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சேந்தமங்கலம் வாரச்சந்தை இடமாற்றம்
X

கோப்பு படம் 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, சேந்தமங்கலம் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேந்தமங்கலத்தில் டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் அருகில் வாரச்சந்தை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் சந்தைக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கிச்செல்வார்கள்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால், டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். எனவே தற்காலிகமாக புதிய பஸ் ஸ்டேண்ட் அருகில் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future