கொல்லிமலை பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: மாவட்ட கலெக்டர் ஆய்வு
கொல்லிமலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 1.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்ச்சியாக சிறப்பு சுருக்க முறை வாக்காளார் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளா; பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இதுவரை வாக்காளா; பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 702 வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்த்தல், திருத்தப் பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம் செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளா; பட்டியலில் பெயர் சேர்த்தால், திருத்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராமசாமி, பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu