நாமக்கல்லில் 21ம் தேதி போலீசார் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் ஏலம்

நாமக்கல்லில் 21ம் தேதி போலீசார் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் ஏலம்
X

பைல் படம்.

கொல்லிமலை போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நாமக்கல்லில் வரும் 21ம் தேதி ஏலம் மூலம் விற்பனை.

கொல்லிமலை போலீஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நாமக்கல்லில் வரும் 21ம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட, உரிமை கோரப்படாத, இருசக்கர வாகனங்கள் வருகிற 21ம் தேதி காலை 10 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

அந்த வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏடிஎஸ்பி அனுமதி பெற்று பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்தி, ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்ளலாம் என கொல்லிமலை தாசில்தார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!