கொல்லிமலை மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொல்லிமலை மலைப்பாதையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
X

கொல்லிமலை, மலைப்பாதையில், முதலாவது கொண்டை ஊசி வளைவில் மூங்கில் மரம் ரோட்டின் குறுக்கே சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொல்லிமலையில் பெய்த பலத்த மழையால் 1 மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

கொல்லிமலையில் பெய்த பலத்த மழையால் 1 மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 70 குறுகிற கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட, மலையின் 1வது கொண்டை ஊசி வளைவில், மலைப்பாதையின் ஓரம் இருந்த பெரிய மூங்கில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதைத்தொடர்ந்து, நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 7 மணி வரை கொல்லிமலை ரோட்டில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர், மலைப்பாதையின் குறுக்கே விழுந்து கிடந்த மூங்கில் மரத்தை அகற்றினர். இதுபோல் 24வது கொண்டை ஊசி வளைவிலும் சாலையின் நடுவே வேரோடு பெயர்ந்து விழுந்து கிடந்த மரங்களை அகற்றி பாதையை சீரமைத்தனர். இதனால் 5 மணி நேரத்திற்குப் பின் கொல்லிமலை மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து சீரடைந்தது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்