முத்துகாப்பட்டி பஞ்சாயத்தில் மரபு வகை விதைகள் நடும் விழா

பைல் படம்
Traditional Seeds India - நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா, முத்துகாப்பட்டி பஞ்சாயத்து, புதுக்கோம்பையில் 8 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம்உள்ளது. இந்த நிலத்தில் மரபு வகை விதைகள் நடும் விழா நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் தலைவர் அருள் ராஜேஷ், தலைமை வகித்து மரபு வகை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் அமெரிக்காவாழ் தமிழர் செல்வம், நபார்டு வங்கி நிதி சேவை அலுவலர் பூங்கொடி, பஞ்சாயத்து துணைத் தலைவர் வருதராஜ், வக்கீல் இளவரசு, கவுசிக் பிரபு, மாவட்ட பசுமை இயக்க செயலாளர் தில்லை சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மரபு வகை விதைகளின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu