தொடர் மழையால் கொல்லிமலை மலைப்பாதையில் திடீர் மண் சரிவு
மண்சரிவு ஏற்பட்ட கொல்லிமலை மலைப்பாதை.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1330 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்குச் செல்ல, குறுகிய70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கொல்லிமலைப் பகுதியில் கடந்த 1 மாதமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில்தான் கொல்லிமலையில் சீசன் துவங்கும். இந்த ஆண்டு கோடையிலும், நல்ல மழை பெய்ததால், இப்போதே சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொல்லிமலைக்கு சென்று அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில், தொடர்மழையால் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில நாட்கள் முன்பு 23-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சில திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் கருங்கற்கள் ரோட்டில் விழுந்தது. அதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றி சரிசெய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மண் சரிவை முழுமையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu